டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை…. 15 பேர் படுகாயம்… தொடரும் பதற்றம்

  0
  9
  ஜஃப்ராபாத் பகுதியில் கலவரம்

  வடகிழக்கு டெல்லியில் ஜஃப்ராபாத் பகுதியில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. 6 போலீசார் உள்பட 15 பேர் காயம் அடைந்தனர்.

  டெல்லியில் ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெண்கள் மற்றும் குழந்தைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று வடகிழக்கு டெல்லியில் ஜஃபராபாத் ரயில் நிலையத்தின் கீழே, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கூடி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்  நடத்தினர்.

  ஜஃப்ராபாத் பகுதியில் கலவரம்

  இதனை அறிந்த முன்னாள் எம்.எல்.ஏ. கபில் மிஸ்ரா டிவிட்டரில், அந்த பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த வரும்படி மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து கபில் மிஸ்ரா தலைமையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக ஒரு குழுவினர் நேற்று மதியம் 3.30 மணி அளவில் மாவ்ஜ்பூர்-பாபர்பூர் மெட்ரோ நிலையம் வந்தனர். அப்போது அங்கு வைத்து இருந்த தடுப்புகளை அகற்றும்படி போலீசாரிடம் வலியுறுத்தினர்.

  ஜஃப்ராபாத் பகுதியில் கலவரம்

  இதற்கிடையே 4 மணி அளவில் ஒரு குழுவினர் ஜஃப்ராபாத் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அடுத்து உள்ள மாவ்ஜ்பூர் சவுக்கில் கூடினர். அப்போது பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். அப்போது எதிர் தரப்பிலிருந்து கற்கள் இந்த குழு வீசப்பட்டது. இதனையடுத்து ஒரு சிலர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரைமணி நேரம் கழித்து சூழ்நிலை கட்டுபாட்டை மீறி செல்வதை உணர்ந்த போலீசார், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி மற்றும்  லேசான சக்தியை பயன்படுத்தி கலவரக்காரர்களை கலைத்தனர். இந்த சம்பவத்தில் 6 போலீசார், 2 கேமராமேன்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். கலவரம் தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் வீடியோ பதிவுகளை பார்த்து கல் எறிந்த நபர்களை போலீசார் அடையாளம் கண்டு வருகின்றனர். மக்கள் கட்டுபாடாக இருக்க வலியுறுத்தி, போலீஸ் மற்றும் துணை ராணுவ படையினர் அந்த பகுதியில் கொடி வகுப்பு நடத்தினர். இருப்பினும் இன்னும் அங்கு பதற்றம் நிலவுவதாக தகவல்.