டெல்லியில் கடும் பனிமூட்டம் – ஐந்து விமானங்கள் திருப்பி விடப்பட்டன!

  0
  8
  fog / top tamil news

  டெல்லியில் கடும் பனிமூட்டம் – ஐந்து விமானங்கள் திருப்பி விடப்பட்டன!

  டெல்லி: தலைநகர் டெல்லியில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதால் ஐந்து விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

  தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக காலை வேளையில் பனிமூட்டம் மிக அதிகமாக காணப்படுகிறது. 50 மீட்டர் தொலைவில் எதிரே வரும் மனிதர்களையும், வாகனங்களையும் கூட கண்களால் பார்க்க முடியவில்லை. இந்நிலையில், பனிமூட்டம் மற்றும் வெளிச்சமின்மை காரணமாக டெல்லிக்கு வந்த 5 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. அந்த விமானங்களை இயக்கிய விமானிகளுக்கு பனிமூட்ட சமயத்தில் விமானத்தை தரையிறக்க போதிய பயிற்சி இல்லாத காரணத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  FOG / TTN

  இதுதவிர 30 விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டன. மேலும் பனிமூட்டத்தால் ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 20 ரயில்கள் தாமதாகவும், வேகம் குறைவாகவும் இயக்கப்பட்டன. டெல்லியில் தொடர்ந்து நிகழும் பனிமூட்டம் காரணமாக அம்மாநில மக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக காலை வேளையில் அலுவலகம் செல்லும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.