டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் : தொல்.திருமாவளவன்

  0
  1
  தொல். திருமாவளவன்

  காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். 

  சமீபத்தில் மத்திய அரசு, ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மத்திய அமைச்சகத்திடம் ஒப்புதல் கேட்க வேண்டாம் என்று விதிமுறையில் திருத்தம் செய்தது. இது, டெல்டா மாவட்டங்களில் வசிக்கும் மக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் கடும் எதிர்ப்பு கிளப்பியது. காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். 
   

  ttn

  மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்த அரசு, டெல்டா மாவட்டங்களில் உள்ள உள்ள வேளாண் பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்ஜெட் தாக்கலின் போது வேளாண் மண்டலமாக மாற்றப் பாடுபடுவோம் என்று முதல்வர் தெரிவித்தார். 

   

  இந்நிலையில் இது குறித்து விடுதலை சிறுத்தைக் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்கள் அறிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். ஆனால்,பட்ஜெட்டில் வேளாண் மண்டலமாக மாற்றப் பாடுபடுவோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.