“டெபிட் கார்டு குளோனிங்” -நவீன தொழில் நுட்ப திருட்டு- பல லட்சங்களை இழந்த பிரபல நடிகர் …

  0
  3
  ATM

  மும்பையில்  நடிகர்-இயக்குனர் ஆனந்த் பால்ராஜ்ஜின்  டெபிட் கார்டு குளோன் செய்யப்பட்டு நடந்த மோசடியில்   ரூ .1.6 லட்சத்தை இழந்தார், மேலும் கெர்வாடி மற்றும் வகோலாவில் உள்ள ஏடிஎம்களில் இருந்து அந்த பணம்  எடுக்கப்பட்டது . ஆனந்த் படப்பிடிப்பு முடிந்து , ஜனவரி 8 ஆம் தேதி மும்பை  திரும்பினார்

  மும்பையில்  நடிகர்-இயக்குனர் ஆனந்த் பால்ராஜ்ஜின்  டெபிட் கார்டு குளோன் செய்யப்பட்டு நடந்த மோசடியில்   ரூ .1.6 லட்சத்தை இழந்தார், மேலும் கெர்வாடி மற்றும் வகோலாவில் உள்ள ஏடிஎம்களில் இருந்து அந்த பணம்  எடுக்கப்பட்டது . ஆனந்த் படப்பிடிப்பு முடிந்து , ஜனவரி 8 ஆம் தேதி மும்பை  திரும்பினார்,.அப்போது  டிசம்பர் 31, 2019 மற்றும் ஜனவரி 7, 2020 க்கு இடையில் தனது  வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து 16முறை  பணம் எடுக்கப்பட்டதை அறிந்து  ஓஷிவாரா போலீசில் புகார் தந்தார் .

  anand

  ‘ராம் லக்கன்’, ‘கல் நாயக்’ மற்றும் ‘பர்தேஸ்’ படங்களில் நடித்த ஆனந்த், வெளியூர்  சுற்றுப்பயணங்களில் இருந்தபோது பணம் திருடப்பட்டுள்ளது . “பொதுவாக, நான் எனது கார்டை  ஆன்லைன் transaction க்கோ  அல்லது ஹோட்டல் பில்களை செலுத்தும்போதோ  முன் எச்சரிக்கையாக  எனது மொபைலைச் சரிபார்ப்பேன் . நான்  ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த குறுஞ்செய்திகளை  எனது போனில் பார்த்தேன்,உடனே அதிர்ச்சியடைந்த நான்  24 மணி நேரத்திற்குள்  புகார் அளிக்க வந்தேன்  “என ஆனந்த் கூறினார்.

  anand

  அவர் மேலும் ,” ஜனவரி 7 ஆம் தேதி, நான் நொய்டாவை அடைந்தபோது, குறைந்தது 16 பரிவர்த்தனை என் கணக்கில் செய்யப்பட்டிருப்பதைக் கண்டேன், ஒவ்வொரு நாளும் ரூ .10,000-30,000 வரை எடுக்கப்பட்டிருந்ததால்   நான்  புகார் அளிக்கச் சென்றேன் , ”என்றார் ஆனந்த்.
  வழக்கை பதிவு செய்யும் போது போலீசார் நடந்து கொண்ட விதத்தை நடிகர் விமர்சித்தார். “தேவையற்ற  கேள்விகளை காவல்துறை கேட்டது வருத்தமளிக்கிறது, மேலும் ஆன்லைன் மோசடி  அபாயத்தை சமாளிக்க அரசாங்கமும் காவல்துறையும் ஒரு தீர்வை எடுக்கவேண்டும் .

  police

  ஆன்லைன் மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஒரு  விழிப்புணர்வு திட்டங்கள் தேவை. , ”என்றார்.
  ஐபிசி மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த வழக்கை சைபர் குழு விசாரித்து வருவதாக மூத்த ஆய்வாளர் தயானந்த் பங்கர் தெரிவித்தார்.