டெபிட் கார்டு இருக்கா… எந்த வங்கி ஏ.டி.எம்-களில் பணம் எடுத்தாலும் கட்டணம் கிடையாது……. 3 மாசத்துக்கு

  0
  4
  ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும் நபர்

  டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் எந்த வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தாலும் 3 மாதத்துக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

  [20:06, 3/24/2020] Gps: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் பெரும்பான்மையான மாவட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன. மக்கள் வீட்டை வெளியே வரமுடியாமல் உள்ளே அடைந்து கிடக்கின்றனர். முடக்கத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவும் வகையில் சில நிதிசேவைகளுக்கான கட்டணம் மற்றும் அபாரதத்தை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.

  குறைந்தபட்ச இருப்பு நீக்கம் (கோப்பு படம்)

  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக கூறுகையில், வங்கி சேமிப்பு கணக்களுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருப்பது கட்டாயம் இல்லை. டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் அடுத்த 3 மாதத்துக்கு எந்த வங்கி ஏ.டி.எம்.களில் பணம் எடுத்தாலும் சேவை கட்டணம் வசூலிக்கப்படாது. ஜி.எஸ்.டி. தாக்கல் செய்தவற்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

  ஏ.டி.எம்.

  ஒரு வங்கியின் வாடிக்கையாளர் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் மாதத்துக்கு அதிகபட்சம் 5 முறை பணம் எடுத்துக்கொள்ள சேவைக்கட்டணம் கிடையாது. ஆனால் அதன் பிறகு பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் அந்த வங்கி சேவை கட்டணம் வசூலிக்கும். அதேபோல் அந்த வங்கி வாடிக்கையாளர் பிற வங்கியின் ஏ.டி.எம்.களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது மத்திய அரசு அடுத்த 3 மாதத்துக்கு ஏ.டி.எம். சேவை கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது.