டெங்கு காய்ச்சலில் வராமல் பாதுகாப்பது, வந்தால் தப்பிப்பது எப்படி?

  0
  2
  டெங்கு காய்ச்சல்

  மற்ற காய்ச்சல்களைப் போல் அல்லாமல் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துவது டெங்கு காய்ச்சல். இ தற்கு முதலில் கொசுக்கள் உருவாவதைத் தடுக்க வேண்டும். வீட்டைச் சுற்றிலும் மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொண்டு, சுத்தமாக வைத்திருங்கள். இரவுகளில் தூங்குவதற்கு முன்பாக முழங்காலில் இருந்து பாதம் வரையில் தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு தூங்கலாம். டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் முழங்காலுக்கு மேல் கடிக்காது. இப்படிச் செய்வதன் மூலமாக டெங்கு வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

  dengue

  சின்ன வெங்காயத்துடன் சாதாரண அச்சுவெல்லத்தைச் சேர்ந்து மென்று சாப்பிட்டால் டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்த தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இப்படி சாப்பிட்டு வந்தால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மூன்று கொய்யா இலைகளை எடுத்து கழுவி, சுத்தமான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்ததும், வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக செயல்படும்.
  அறுகம்புல் வேர் ஒரு கைப்பிடி எடுத்து, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து காலை, மாலை என குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும். மலைவேம்பு இலைகளுடன் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி 10 மி.லி அளவு தினமும் மூன்று முறை குடித்து வந்தால் டெங்கு வைரஸை எதிர்க்கும் சக்தி கிடைக்கும்.

  nilavembhu

  நிலவேம்பு கஷாயம் டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்துவதுடன் ரத்த தட்டணுக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். 5 முதல் 10 கிராம் நிலவேம்புப் பொடியை 200 மி.லி தண்ணீரில் கொதிக்க வைத்து நன்றாக வற்றியதும் வடிகட்டி குடிக்க வேண்டும். பப்பாளி இலையின் காம்பைக் கிள்ளி விட்டு, அரைத்து, வடிகட்டி 10 மி.லி வீதம் தினமும் நான்கு தடவை குடித்து வந்தால் ரத்த தட்டணுக்கள் அதிகரிப்பதுடன் மலேரியா, டெங்கு காய்ச்சல் குணமாகும்.