டூவீலரில் குழந்தைகளை அழைத்து வந்த தம்பதியிடம் கெடுபிடி ! உயர் அதிகாரி போல காவலர் பணம் வசூலிப்பு !

  0
  6
  chidambaramtraffic

  கடலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி காவலர் ஒருவர் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  கடலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி காவலர் ஒருவர் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ஒரு தம்பதி தங்களது 2 குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் வருகின்றனர். அதாவது 4 பேர் இருசக்கர வாகனத்தில் வந்ததால் காவலர் சார்லஸ் அவர்களை வழிமறித்து அபராதம் கேட்கிறார். இதற்கு அந்த தம்பதி எதிர்ப்பு தெரிவிக்க இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றுகிறது. போலீசாருக்கும் அந்த தம்பதிக்கும் இடையேயான வாக்குவாதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  chidambaramtraffic

  சிதம்பரத்தில் பணிபுரிந்து வரும் காவலர் சார்லஸ் உதவி ஆய்வாளர் வேல்முருகனை தன் வசம் வைத்துக்கொண்டு விதிகளை மீறி வரும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும்  அபராதம் வசூக்கும் ஆன்லைன் டிஜிட்டல் மிஷினை வைத்துக்கொண்டு அபராதம் வசூலிப்பது போல் பணம் வசூலிப்பதாக மிரட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உயர் அதிகாரிகள் மட்டுமே அபராதம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கும்போது காவலர் நிலையில் உள்ளவர் எப்படி அபராதம் வசூலிக்கலாம் என கேள்வி எழுப்புகின்றனர். பண்டிகை தினத்தை முன்னிட்டு ஆடைகள் வாங்க குழந்தைகளுடன் சென்ற தம்பதியை காவலர் சார்லஸ் வழிமறித்து அபராதம் கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதம் தற்போது சிதம்பரத்தில் பலர் இதுகுறித்து பேசி வருகின்றனர். மேலும் அந்த தம்பதி கேட்கும் கேள்விகள் போலீசாரின் நன்மதிப்பை குறைக்கும் விதமாக உள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே சார்லஸை பணியிடமாற்றம் செய்யவேண்டும் என்றும் வேறு காவலர்களை பணி அமர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.