டீ கடையில் ‘வடை சூடா தான் வேணும்’ : தகராறு செய்த திமுக பிரமுகர் கைது…!

  0
  5
  linga durai

  டீ கடைக்காரர் நள்ளிரவில் வடை சூடாகக் கிடைக்காது என்று கூறியுள்ளார். 

  பொள்ளாச்சி வடுக பாளையத்தில் வசித்து வரும் திமுக பிரமுகர் லிங்க துரை நேற்று நள்ளிரவு, பழைய பேருந்து நிலையத்தில் உள்ள டீ கடைக்குத் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அனைவரும் டீ குடித்துக் கொண்டிருக்கும் போது, கூடவே வடையும் சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்று, டீ கடைக்காரரிடம் வடை கேட்டுள்ளனர். டீ கடைக்காரர் ஆறிப்போன வடையைக் கொடுத்துள்ளார். லிங்க துரை தனக்குச்  சூடாக வடை வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு டீ கடைக்காரர் நள்ளிரவில் வடை சூடாகக் கிடைக்காது என்று கூறியுள்ளார். 

  Tea shop

  ஆத்திரமடைந்த லிங்க துரையும் அவரது நண்பர்களும் டீ கடைக்காரரைப் பலமாகத் தாக்கியுள்ளனர். அது மட்டுமின்றி, டீக்கடைக்காரர் அவரது பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.9,600 ரூபாயையும் அவரிடம் இருந்து பிடுங்கிக்கொண்டு சென்றுள்ளனர்.

  Linga durai

  இது குறித்து, டீ கடைக்காரர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், திமுக பிரமுகர் லிங்க துரையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், டீ கடைக்காரரைத் தாக்கிய லிங்க துரையின் நண்பர்களையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.