டி.டி.வி.தினகரன்- ஸ்டாலினுக்கு சம்மட்டி அடி… அடித்துத் தூக்கக் காத்திருக்கும் அதிமுக..!

  0
  4
  டி.டி.வி.தினகரன்

  நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுகவின் பின்னடைவு குறித்து அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் உற்சாகம் இழந்து விட்டனர்.

  நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுகவின் பின்னடைவு குறித்து அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் உற்சாகம் இழந்து விட்டனர்.

  இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான வைகைச் செல்வன் பேசுகையில் ’’தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தேர்தலை சந்திக்க துணிந்து போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடவில்லை. ஆனால் திமுக நீதிமன்றத்தின் நீண்ட நெடிய கதவுகளை மக்களின் ஜனநாயகத்தை காவு வாங்குவதற்காக தேர்தலை நிறுத்துவதற்கு முயற்சித்தது. stalin

  போர்க்களத்திற்கு பயந்து பின்னங்கால் பிடறி தெறிக்க ஓடி ஒளிந்தது. ஆக இதிலிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் அதிமுகவின் துணிச்சலுக்கு கிடைத்த வெற்றி. தேர்தலை கண்டு பயந்து அஞ்சி நடுங்கிய திமுக கிடைப்பது வெற்றியல்ல. புறமுதுகு காட்டி ஓடி அதிமுகவுக்கு விழுந்த வாக்குகள் எல்லாம் அவர்களுடைய வெற்றிக்காக விழுந்த மாலையாக கருதக் கூடாது. 

  கொலைக்களத்துக்கு விழுந்த சம்மட்டி அடியாக கருத வேண்டும். குடி உரிமை சட்டத்தில் தவறான தோற்றத்தை ஏற்படுத்தி சிறுபான்மையின மக்களின் வாக்குகளை சில இடங்களில் பெற்றதால் கிடைத்த வெற்றியே அது. நாங்கள் எதற்கும் தயங்க மாட்டோம். தேர்தலை கண்டு அஞ்ச மாட்டோம். எப்போது வேண்டுமானாலும் தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அறிவித்தவுடன் களத்தில் இறங்க தயாராக உள்ளோம். டிடிவி தினகரன் கட்சி பல இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும் அது காலாவதியான மாத்திரை.

   ttv dhinakaran

  அதை சாப்பிட்டால் உடல் நலக் கோளாறு ஏற்படும். அதிமுகவின் தற்போதைய தலைமை சீரோடும் சிறப்போடும் செம்மையாக நடைபெற்று வருகிறது. கழகத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் துணையாக நிற்கிறார்கள். வருகிற 2021ல் அதிமுக ஆட்சியை பிடிக்கும். எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகிய இருபெரும் ஆளுமைகள் போல எடப்பாடியும் ஓபிஎஸும் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்கிறார்.