டி.டி.வி.தினகரனுக்கு தூது விட்ட மு.க.ஸ்டாலின்… அதிர்ச்சியில் எடப்பாடி..!

  0
  1
  டி.டி.வி.தினகரன்

  மு.க.ஸ்டாலினிடம் கொளுத்திப் போட உடனே, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஸ்டாலின், துாது விட்டுள்ளார்.

  அரசியலில் வெற்றிபெற யார் காலையும் யாரும் பிடிக்கலாம்… யார் காலையும் எவரும் வாரி விடலாம் என்பதற்கு பல உதாரணங்கள் உண்டு. அதில் லேட்டஸ்ட் மு.க.ஸ்டாலின் டி.டி.வி.தினகரனுக்கு தூது விட்டது. 

  stalin

  விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி-  நெல்லையில் உள்ள நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதில், விக்கிரவாண்டியில், தி.மு.க., – அ.தி.மு.க. நாங்குநேரியில் தி.மு.க  கூட்டணி கட்சியான காங்கிரஸ் – அ.தி.மு.க., இடையில் கடுமையான போட்டி ஏற்பட்டிருக்கிறது.

  ttv dhinakaran 

  இந்த இரண்டு தொகுதிகளிலும்  அ.ம.மு.க.வுக்கு 20 ஆயிரம்  ஓட்டுகள் இருக்கிறது என யாரோ திமு.க., தலைவர் மு.க.ஸ்டாலினிடம்  கொளுத்திப் போட உடனே, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு ஸ்டாலின், துாது விட்டுள்ளார்.

  stalin

  ’’ தலைவருக்கு ஏன் தான் இப்படி புத்தி போறதோ தெரியலே. உண்மை நிலவரத்தை விசாரிக்க வேண்டாமா..? இவரோட அப்பா இருந்திருந்தார்னா, நடக்கறதே வேற… வாத்யார் பிள்ளை மக்குன்னு சொல்வாங்களே… அது போல தான் இதுவும்…” என்று தலையிலடித்துக் கொள்கின்றனர் திமுக நிர்வாகிகள்.