டி.டி.வி.தினகரனின் பொட்டைத்தனம்… ஆத்திரத்தில் பொங்கும் தங்க தமிழ்செல்வன்..!

  0
  3
  டி.டி.வி.தினகரன்

  இந்த மாதிரி பொட்டத்தனமான அரசியல் பண்றதை நிறுத்தச்சொல்லுப்பா. உங்க அண்ணணை நிறுத்தச்சொல்லு. நான் விஸ்வரூபம் எடுத்தா, நீங்க அழிஞ்சிபோவீங்க. நான் நல்லவன்.

  அ.தி.மு.க.வில் இருந்து தங்கதமிழ்செல்வனிடம் ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்ட போதிலும், தங்கதமிழ்செல்வன் அதை மறுத்து வந்தார். இந்நிலையில், தற்போது டி.டி.வி. தினகரனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அ.ம.மு.க. நிர்வாகி ஒருவரிடம், தங்க தமிழ்செல்வன் தொலைபேசியில் பேசியதாக கூறப்படும் ஒரு பரபரப்பு ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.தங்கம்

  அந்த ஆடியோவில், , டி.டி.வி. தினகரன் எங்கே என கேட்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அதற்கு அவர், “அண்ணன் இல்லை. நான் ஊருக்கு வந்துவிட்டேன்” என்கிறார். உடனே கோபப்படும் தங்க தமிழ்ச்செல்வன், “இந்த மாதிரி பொட்டத்தனமான அரசியல் பண்றதை நிறுத்தச்சொல்லுப்பா. உங்க அண்ணணை நிறுத்தச்சொல்லு. நான் விஸ்வரூபம் எடுத்தா, நீங்க அழிஞ்சிபோவீங்க. நான் நல்லவன். நேற்று நீங்க தேனியில கூட்டம் போட்டீங்க. நாளைக்கு நான் மதுரைல கூட்டம் போடவா? பாரு… என்ன நடக்குதுனு பாரு. இந்த பேடித்தனமான அரசியல பண்ண வேணாம்னு உங்க அண்ணன்ட சொல்லிடு. தோத்துப்போவ… என்னைக்கும் ஜெயிக்க மாட்ட”இவ்வாறு தங்க தமிழ்செல்வன் பேசுவதாக உள்ளது. அதில் ஒரு சில ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன.ttv

  இதுகுறித்து தேனி மாவட்ட அ.ம.மு.க. வட்டாரத்தில் கேட்டபோது, ‘அ.ம.மு.க. நிர்வாகிகளான உசிலம்பட்டி மகேந்திரன், மதுரை நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட டேவிட் அண்ணாதுரை ஆகியோர் நேற்று முன்தினம் தேனிக்கு வந்துள்ளனர். தங்கதமிழ்செல்வனுக்கு தெரியாமல் நிர்வாகிகள் சிலரை சந்தித்து தேனி தொகுதியில் அ.ம.மு.க. தோல்விக்கான காரணம் குறித்து விவரங்கள் கேட்டுள்ளனர். இதற்காக அவர்கள் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். இதை அறிந்ததால் தங்கதமிழ்செல்வன் கோபத்தில் இப்படி பேசி இருக்கலாம்’ என்றனர்.

  ttv

  இந்த தொலைபேசி உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.