டி.டி.வி.தினகரனின் தைரியம் கூட மு.க.ஸ்டாலினுக்கு இல்லையா..? திணறும் திமுக..!

  8
  டி.டி.வி.தினகரன்

  உள்ளாட்சித் தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுக்கு இடப்பங்கீடுகளை முடித்து விடு படுஜோராக களமிறங்கத் தயாராகி விட்டது அதிமுக. அதற்கு நேர் மாறாக இருக்கிறது திமுகவின் நிலைமை.

  உள்ளாட்சித் தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளுக்கு இடப்பங்கீடுகளை முடித்து விடு படுஜோராக களமிறங்கத் தயாராகி விட்டது அதிமுக.  அதற்கு நேர் மாறாக இருக்கிறது திமுகவின் நிலைமை. 

  உள்ளாட்சித் தேர்தல் வராது என்றே திமுகவின் பல நிர்வாகிகள் அசட்டையாக இருந்ததே இதற்குக் காரணம். கடந்த 8ஆம் தேதி நடந்த மாவட்டசெயலாளர்கள் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘உள்ளாட்சித் தேர்தல் நடக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டாலும் அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும்’ என்று பேசினார். ஆனால், இன்று  வரை பல மாவட்டங்களில் திமுக கூட்டணியில் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை முடியவில்லை.ttv dhinakaran

  அவர்களை விட அமமுக உள்ளாட்சித் தேர்தலில் களம் காண தீவிரமாக இருக்கிறது. பொது சின்னம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் தேர்தலை எதிர்கொள்ளத் தீவிரமாகிவிட்டார் டி.டி.வி.தினகரன். நாளை டிசம்பர் 13 டி.டி.வி.தினகரனுக்குப் பிறந்தநாள். அன்று எல்லா மாவட்டங்களிலும் அமமுகவினரை வேட்பு மனுத் தாக்கல் செய்ய சொல்லிவிட்டார். தேர்தல் பணிகளில் அமமுகவினரிடம் இருக்கும் வேகம்கூட திமுகவினரிடம் இல்லை.