டி காக் விளாசல்.. தொடரை சமன் செய்தது தென்னாபிரிக்கா..!!

  0
  2
  India vs South africa

  பி ஹென்ரிக்ஸ் ஆட்டநாயகனாகவும், குயின்டன் டி காக் தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

  குயின்டன் டி காக் அதிரடியால் இந்தியாவை வீழ்த்தி டி20 தொடரை சமன் செய்தது தென்னாபிரிக்கா அணி.

  இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்கா அணி முதல் கட்டமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. 

  India Vs south africa

  இதில் 2 போட்டிகளின் முடிவில் இந்தியா 1-0 என முன்னையில் இருந்தது. 3வது டி20 போட்டி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்றது.

  டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ரோஹித் – தவான் ஜோடி வழக்கம் போலவே களமிறங்கியது.

  2ஆம் போட்டியில் விரைவாக ஆட்டமிழந்த ரோஹித் இன்றைய போட்டியில் நல்ல ஸ்கோரை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 9 ரன்களுக்கு வெளியேறினார். 

  அடுத்ததாக, தவான்(36) மற்றும் கோலி(9) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா தடுமாறியது. அடுத்து வந்த பண்ட்(19), ஷ்ரேயாஸ்(5) மற்றும் க்ருனால்(4) மூவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 98-6 என மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

  20 ஓவர்கள் முடிவில் இந்தியா 9 விக்கெட்டுகள் இழந்து 134 ரன்கள் எடுத்தது. ரபாடா 3 விக்கெட்டுகளும், போர்டுயின் மற்றும் ஹென்ரிக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

  India Vs south africa

  135 என்ற எளிய இலக்கை துரத்திய தென்னாபிரிக்கா அணிக்கு ஹென்ரிக்ஸ் மற்றும் டி காக் இருவரும் நல்ல துவக்கம் அமைத்தது. ஹென்ரிக்ஸ் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

  பின்னர், டி காக்(79) மற்றும் பவுமா(27) இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் தென்னாபிரிக்கா அணியை 16.5 ஓவர்களில் இலக்கை எட்டச் செய்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெல்ல உதவினர்.

  இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்கா 1-1 என டி20 தொடரை சமன் செய்தது. 

  பி ஹென்ரிக்ஸ் ஆட்டநாயகனாகவும், குயின்டன் டி காக் தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.