டி.ஆர்.பாலு, தயாநிதி கருத்துக்கு மோடி வரவேற்பு!

  0
  1
  Speaker Om Birla

  கடந்த 70 ஆண்டுகளாக நாடு சென்றுகொண்டிருந்த பாதையை வெறும் 5 ஆண்டுகளில் மாற்ற முடியாது என தெரிவித்த மோடி, சுதந்திர போராட்டத்தின்போது துணிச்சலான பெண்களும், ஆண்களும் தேசத்துக்காக உயிர் துறந்தனர். நமது சுதந்திர போராளிகள் கனவு கண்ட இந்தியாவை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.

  மக்களைவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீது பிரதமர் மோடி பேசினார். அப்போது மக்களவையின் புதிய சபாநாயகராக ஒருமனதாக தேர்வான ஓம் பிர்லாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். முன்னதாக விவாதத்தின்மீது பேசிய திமுக உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரின் ஆக்கப்பூர்வமான‌ கருத்துகளுக்கும் வரவேற்பு தெரிவித்த மோடி, எதிர்க்கட்சியினரின் செயல்பாட்டுக்கும் பாராட்டு தெரிவித்தார்.

  Modi in Lok sabha

  கடந்த 70 ஆண்டுகளாக நாடு சென்றுகொண்டிருந்த பாதையை வெறும் 5 ஆண்டுகளில் மாற்ற முடியாது என தெரிவித்த மோடி, சுதந்திர போராட்டத்தின்போது துணிச்சலான பெண்களும், ஆண்களும் தேசத்துக்காக உயிர் துறந்தனர். நமது சுதந்திர போராளிகள் கனவு கண்ட இந்தியாவை நாம் கட்டியெழுப்ப வேண்டும். காந்திஜியின் 150ஆவது பிறந்த நாள் மற்றும் இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை மிகுந்த ஆர்வத்துடன் கடைபிடிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார்!