டிவி விவாதங்களில் சர்ச்சை கருத்து; ஸ்ட்ரிக்ட் கண்டிஷன் போட்ட தளபதி விஜய்

  0
  10
  vijayabaskar

  தளபதி விஜய் சார்பாக ஊடகங்களில் பேசுவது, விவாதம் செய்வபவர்களின் சொந்த கருத்துக்களை யாரும் நம்ப வேண்டாம் என விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  சென்னை: தளபதி விஜய் சார்பாக ஊடகங்களில் பேசுவது, விவாதம் செய்வபவர்களின் சொந்த கருத்துக்களை யாரும் நம்ப வேண்டாம் என விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நடிகர் விஜய்யின் முன்னாள் மக்கள் தொடர்பாளராக ஒருந்த பி.டி.செல்வகுமார், சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று விஜய் சார்பாக சில கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார். அது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

  ptselvakumar

  இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக புஸ்ஸி என்.ஆனந்தன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பி.டி.செல்வகுமார் நீண்டகாலம் விஜய்யின் மக்கள் தொடர்பளராக நல்ல விதமாக பணியாற்றியவர். சில காரணங்களால் அவர் தற்போது அப்பதவியிலும், விஜய்யுடனும் இல்லை என்பதை கூற கடமைப்பட்டிருக்கிறேன். மேலும், அவர் விஜய் மக்கள் இயக்கத்திலும் எவ்வித பொறுப்பிலும் இல்லை.

  இருப்பினும், விஜய்யின் பெயரை பயன்படுத்தி ஒரு சிலர், அவர்களது சொந்தக் கருத்துக்களை, விஜய்யின் கருத்து போல் ஊடகங்களில் பேசி வருகின்றனர். இதை நடிகர் விஜய் விரும்பவில்லை. விஜய் எந்த காலத்திலும் சக நடிகர்களையோ, பொது மனிதர்களையோ தரம் தாழ்த்தி பேசியதில்லை, அவ்வாறு யாரையும் பேச சொல்லவும் இல்லை என்பதை தெளிவுப்படுத்திக் கொள்கிறேன்.

  ஆகவே, விஜய் குறித்த தகவல்களை ஊடகங்களில் பேசுவதோ, விவாதிப்பது, கருத்து தெரிவிப்பவர்கள் சொல்வதை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.