டிரம்ப் வருகையால் ஏழைகளுக்கு பலன் இல்லை! – சிவசேனா கருத்து

  0
  5
  shiv sena

  சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் இன்று வெளியியாகி உள்ள தலையங்கத்தில், “டிரம்பின் இந்தியப் பயணத்தால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் டிரம்ப் பயணத்தைப் பலரும் புகழ்கிறார்கள்.

  அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையால் ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு பலன் ஒன்றும் இல்லை என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
  சிவசேனாவின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் இன்று வெளியியாகி உள்ள தலையங்கத்தில், “டிரம்பின் இந்தியப் பயணத்தால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை. ஆனாலும் டிரம்ப் பயணத்தைப் பலரும் புகழ்கிறார்கள். அது ஏன் என்றுதான் தெரியவில்லை.

  trump-india.jpg

  அகமதாபாத்துக்கு டிரம்ப் வருகிறார். அவர் வருகையை விடக் குடிசைகளை மறைப்பதற்காகக் கட்டப்பட்ட சுவர்கள் பற்றித்தான் அதிகம் பேசப்படுகின்றன.
  இந்தியாவில் நிலவும் மதச் சுதந்திரம் பற்றி டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்படுகிறது. இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை. இந்தியாவை ஆள்பவர்களை மக்கள் ஜனநாயக முறைப்படி வாக்களித்துத் தேர்ந்தெடுத்துள்ளனர். அந்த தலைவர்களுக்கு வழிகாட்டுவதை விட்டுவிட்டு, அகமதாபாத், டெல்லி, ஆக்ராவை டிரம்ப் சுற்றிப் பார்க்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.