டிசம்பர் 12ல் உதயமாகும் புது கட்சி! ரஜினி மனசில் என்ன இருக்கு?

  0
  10
   ரஜினி

  ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ரசிகர்களின் மனசை டன் கணக்கில் அழுத்துகிற கேள்வி இது தான். இந்த வருஷமாவது தலைவர் கட்சியை ஆரம்பித்து விடுவாரா? யெஸ்… ரசிகர்களின் மனசை ரஜினியும் புரிந்து தான் வைத்திருக்கிறார். ஆனால், சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்று சொல்லிவிட்டதால், அதை நோக்கியே காய் நகர்த்தி வருகிறார் ரஜினி. 

  ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ரசிகர்களின் மனசை டன் கணக்கில் அழுத்துகிற கேள்வி இது தான். இந்த வருஷமாவது தலைவர் கட்சியை ஆரம்பித்து விடுவாரா? யெஸ்… ரசிகர்களின் மனசை ரஜினியும் புரிந்து தான் வைத்திருக்கிறார். ஆனால், சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்று சொல்லிவிட்டதால், அதை நோக்கியே காய் நகர்த்தி வருகிறார் ரஜினி. 

  rajini

  முதல்வர் எடப்பாடி சிவாஜியை உதாரணம் சொல்லி ரஜினியையும், கமலையும் வம்பிழுத்தது பற்றியெல்லாம் ரஜினி தரப்பில் எந்த விதமான ரியாக்‌ஷனுமே கிடையாதாம். காரணம்… இதே சிவாஜியை உதாரணம் காட்டி தான் ரஜினி இதுநாள் வரையில் அரசியலுக்கு வராமல் இருந்தார் என்கிறார்கள் ரஜினியின் நண்பர்கள். அதனால் தான் சோ, மூப்பனர் போன்றவர்கள் எல்லாம் வற்புறுத்தியும் அரசியலுக்கு வராமலே இருந்தார். வந்தால் வெற்றி பெற வேண்டும். அவ்வளவு பெரிய மனிதர். எத்தனையோ ஜாம்பவான்கள் எல்லாம் அரசியலில் சோபிக்காமல் போய் விட்டார்கள். அதனால், நமக்கு அதெல்லாம் ஒத்து வராது என்று ஒதுங்கியே நின்றதற்கு அது தான் காரணமாக இருந்தது.

  rajni

  இப்போது அரசியலில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம் தான் ரஜினியின் அரசியல் எண்ட்ரியைத் தீர்மானித்திருக்கிறது. இதைத் தான் ஆண்டவனின் உத்தரவாக கருதுகிறார் ரஜினி. இப்போது தமிழகத்தில் அரசியலில் சொல்லிக் கொள்ளும்படியான தலைவர்களை விரல் விட்டு எண்ணுங்கள். அவர்கள் அத்தனைப் பேரையும் விட ஒருபடியாவது ரஜினிக்கு மாஸ் அதிகம் தான். இந்த முறை தன்னுடைய சக்தியை சிந்தாமல், சிதறாமல் ஒன்று சேர்க்க வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருக்கிறார்.

  தவிர, அரசியலில் எது வேண்டுமானாலும் நடைப்பெறலாம் என்பதிலும் ரஜினி தெளிவாக இருக்கிறார். ஆர்.கே.நகரில் விஷால் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விதத்தையும் ரஜினி மறக்கவில்லை. அந்த மாதிரியான தகிடுத்தனங்களுக்கு பதிலடி கொடுக்கவும் ரஜினி மன்றத்தில் ஆட்கள் இப்போதே தயார் நிலையில் இருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை என்பதெல்லாம் மன்றத்து ஆட்களுக்கு வாய்மொழியாக ஏற்கெனவே சொல்லப்பட்ட விஷயங்கள் தான். இந்த பிறந்தநாளுக்கும் எந்த அறிவிப்பும் பெரிதாக வெளிவராது.  அடுத்த வருட பிறந்தநாளுக்கு தான் மெகா திட்டங்களை எல்லாம் வைத்திருக்கிறார் ரஜினி.

  rajini

  ‘நான் இதையெல்லாம் செய்யலாம்னு இருக்கேன். யார் கூடவும் கூட்டணி கிடையாது. அனைத்து தொகுதிகளிலும் தனியாக தான் போட்டியிடப் போகிறேன். என் மீது நம்பிக்கை இருந்தால் எனக்கு வாக்களியுங்கள்!’ இது தான் ரஜினியின் பிரச்சார யுக்தி. யாரைப் பற்றியும் தவறாக ஒரு கருத்து கூட ரஜினியின் பிரச்சார திட்டத்தில் இருக்கக் கூடாது என்பது உத்தரவாம். நாம ஜெயிக்கப் போறோம். அப்புறமா மக்களுக்கு என்ன செய்யணும்னு யோசிப்போம். மத்தவங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க! என்று உற்சாகமாக திட்டங்களுக்கு இப்போதே டிக் அடிக்கத் துவங்கியிருக்கிறார் ரஜினி. தவிர, தனது 70வதாவது வயதில் தான் ரஜினிக்கு அரசியலுக்கான யோகம் இருப்பதாக லதா ரஜினிகாந்த ஜாதகம் பார்த்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதையெல்லாம் கூட்டிக் கழித்தே அதுவரையில் அமைதி காத்து வருகிறார் ரஜினி.