டிக்-டாக் விபரீதம்: தற்கொலை முயற்சி…யார் பத்தினி? – கடல் கன்னியின் அலம்பல்கள்

  0
  5
  tiktok

  டிக்டாக் ஆப்-இல் மூன்று குடும்ப பெண்களுக்குள் யார் பத்தினி என்று விவாதம் நடந்தது பார்த்து நெட்டிசன்கள் மிரட்சியில் உள்ளனர்.

  செஞ்சி: டிக்டாக் ஆப்-இல் மூன்று குடும்ப பெண்களுக்குள் யார் பத்தினி என்று விவாதம் நடந்தது பார்த்து நெட்டிசன்கள் மிரட்சியில் உள்ளனர்.

  செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் டிக்டாக் ஆப்-இல் கடல் கன்னி என்ற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். காலை வேளையில் மங்களகரமான வீடியோக்களையும், இரவு நேரங்களில் கடல் கன்னி கட்டில் கன்னி போல மாறி வீடியோக்களையும் பதிவிடுகிறார். கடல் கன்னியின் வீடியோக்கள் மூலம் அவருக்கு லதா, சுமதி, கவிதா என்ற மூன்று பெண்கள் அறிமுகம் ஆகினர். மூவரும் நேரில் சந்தித்தோடு ஒருவருக்கு ஒருவர் உணவு ஊட்டிக் கொள்ளும் அளவுக்கு நட்பு பாராட்டினார்கள்.

  இந்நிலையில், கடல் கன்னிக்கு அறிமுகமான மூவரும் அவரை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. அதற்காக கடல் கன்னிக்கு ரூ.2 லட்சம் தருவதாக மூவரும் ஆசை காட்டியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் இவர்களுக்குள் சண்டையாக மாறி கடல் கன்னியை மற்றவர்களும், மற்றவர்களை கடல் கன்னியும் திட்டி அதை டிக்டாக்கில் வீடியோவாக பதிவிட்டனர். இவர்களது சண்டை வீடியோக்களை பார்த்து நெட்டிசன்கள் மிரட்சி அடைந்தார்கள். ஒருகட்டத்தில் அவர்களுக்குள் யார் பத்தினி என்ற விவாதம் ஓடியதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

  இதன் உச்சக்கட்டமாக கடல் கன்னி தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது. அவருக்கு குளுக்கோஸ் ஏறும் நிலையில் கூட சோகப் பாடலுக்கு நடித்து டிக்டாக்கில் வீடியோ பதிவிட்டுள்ளார். இவ்வாறு டிக்டாக் செயலியால் பல குடும்ப பெண்களின் வாழ்க்கை சீரழிவது பொதுமக்கள் இடையே பேசுபொருளாகி இருக்கிறது.