டிக்டாக்கில் மூழ்கிய மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த காதல் கணவன்!

  0
  1
  கொலை

  இன்றைக்கு தமிழக தாய்க்குலங்களை வயது வித்தியாசமின்றி ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் பயங்கரமான நோய்க்குப் பெயர் டிக் டாக். தன் திறமைகளை எக்ஸ்போஸ் பண்ணத்துவங்கி லைக்குகள் அதிகம் விழாவிட்டால் மெல்ல தன்னையே கூட எக்ஸ்போஸ் பண்ணிக்கொள்ளும் சங்கடங்கள் அதிகரித்தும் நிலையில், சதா டிக் டாக்கிலேயே மூழ்கிக் கிடந்த ஒரு பெண்ணைக் கணவரே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  tit tok

  மதுரை திருநகர் சூறாவளிமேட்டைச் சேர்ந்தவர் அசோக். இவர் அழகு கலை நிபுணரான சுதா என்ற பெண்ணை 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.இத்தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தையும், 4 வயதில் ஆண் குழந்தையும் உள்ள நிலையில், டிக்டாக் மீது அதிக நாட்டம் கொண்ட சுதா நாள் பொழுதை டிக்டாக்கிலேயே கழித்து வந்துள்ளார். சுதாவுடன் பல ஆண்கள் டூயட் செய்திருக்கின்றனர். இதனை பார்த்த நண்பர்கள் சிலர் அசோக்கிடம் தெரிவிக்க, அவர் மனைவியிடம் டிக்டாக் செய்வதை நிறுத்தும் படி கூறியுள்ளார். ஆனால் சுதா அதனை பொருட்படுத்தவில்லை. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

  murder

  ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அசோக் மனைவியை தாக்கி கீழே தள்ளி சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். அதன் பிறகு தலைமறைவான அவரை வலைவீசி தேடி வந்த திருநகர் போலீசார், திருப்பரங்குன்றம் அருகே பதுங்கி இருந்த அசோக்கை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு வேலை ஏதும் கிடைக்காததால் மனைவியின் சம்பாத்தியம் மூலம் குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார். இதனால் தன்னை மதிக்காமல் டிக்டாக்கில் மூழ்கிய சுபா அடிக்கடி வெளியூருக்கு வேலைக்கு சென்று வந்ததால் அவரது நடந்தையில் சந்தேகம் அடைந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.