டாஸ்மாக் கடை எப்போது திறக்கப்படும் – அமைச்சர் தங்கமணி தகவல்!

  0
  1
  அமைச்சர் தங்கமணி

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி நடைபாதை வியாபாரிகளுக்கு நிவாரண நிதியாக 1000 ரூபாயை வழங்கினார்.

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி நடைபாதை வியாபாரிகளுக்கு நிவாரண நிதியாக 1000 ரூபாயை வழங்கினார். மேலும் திருச்செங்கோடு வாடகை கார் ஓட்டும் 50 ஓட்டுநர்களுக்கு 25 கிலோ அரிசி மூட்டையும், ஆயிரம் ரூபாய் நிவாரண உதவியும் அமைச்சர் தங்கமணி வழங்கினார்

  tasmac

  இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை இயக்கும் எண்ணம் இல்லை. மாற்று போதை நாடுவோருக்கு கவுன்சிலிங் வழங்க அரசு மருத்துவமனையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தொடருமா என்பது பிரதமரும் முதல்வரும் எடுக்கும் முடிவில்தான் உள்ளது” எனக் கூறினார்.