டாஸ்மாக் இல்லாததால் கள்ளச்சாராயம் அமோக விற்பனை!

  0
  9
  கள்ளச்சாராயம்

  கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

  கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல் 14 தேதி வரை எந்த மதுபான கடைகளும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், காஞ்சிபுரத்தில் கள்ள சாராயம் விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், மக்கள் அவரவர் வீடுகளிலேயே கள்ள சாராயம் செய்து விற்பனை செய்கின்றனர். குறிப்பாக, இதற்கு போலீசாரும் உடைந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. 

  ttn

  இங்குமட்டுமல்லாது திருவண்ணாமலை மாவட்ட எல்லைப்பகுதிகளில் பாக்கெட்டில் அடைத்து விற்கப்பட்டு வந்த சாராயம் இப்போது கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாலும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததாலும் கள்ள சாராயம் விற்பனை அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.