டாஸ்மாக்குள் புகுந்து ஆட்டயப் போட்ட குடிமகன்கள்!! அலேக்காக தூக்கிச்சென்ற காவல்துறை…

  0
  735
  டாஸ்மாக்

  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

  இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,251 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கிலும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ரெயில், விமான போக்குவரத்துகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளும் நாடு முழுக்க மூடப்பட்டுள்ளது.

  tasmac

  இந்நிலையில் தஞ்சை மாவட்டம் வீரடிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் பணிபுரியும் கண்காணிப்பாளர் அரங்கசாமி (42), விற்பனையாளர் சவுந்தரராஜன் (33), ஓட்டுநர் சக்திவேல் (30), ரெங்கராஜ் (24) ஆகியோர் திருவோணம் பகுதிகளில், பதுக்கி வைத்து மதுபாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்ததாக் கூறப்படுகிறது.இந்நிலையில், பதுக்கி வைத்து விற்பனை செய்த மதுபாட்டில்கள் அனைத்தும் காலியாகி உள்ளன. இதனால், நால்வரும் வீரப்பட்டியில் உள்ள மதுபானக் கடையை திறந்து, மதுபாட்டில்களை பெட்டி பெட்டியாக, சரக்கு வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதைகண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 700 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் நான்கு பேரும் சட்டவிரோத மதுவிற்பனைக்காக, மதுபாட்டில்களை திருடியது தெரியவந்தது.