டார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்னை தீராது! – ராகுல் காந்தி வேதனை

  0
  1
  Rahul Gandhi

  கொரோனா தீவிரம் பற்றி தொடக்கம் முதலே எச்சரித்து வருபவர் ராகுல் காந்தி. ஆனால், அவருடைய எச்சரிக்கைகளை எல்லாம் மத்திய அரசு குறிப்பாக மத்திய சுகாதாரத் துறை ஒதுக்கித் தள்ளியது. மேலும், ராகுல் காந்தி அவதூறாக தவறாக பேசுவதாக குற்றம் வேறு சாட்டியது.

  கை தட்டுவதால், டார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்னை தீராது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
  கொரோனா தீவிரம் பற்றி தொடக்கம் முதலே எச்சரித்து வருபவர் ராகுல் காந்தி. ஆனால், அவருடைய எச்சரிக்கைகளை எல்லாம் மத்திய அரசு குறிப்பாக மத்திய சுகாதாரத் துறை ஒதுக்கித் தள்ளியது. மேலும், ராகுல் காந்தி அவதூறாக தவறாக பேசுவதாக குற்றம் வேறு சாட்டியது.

  modi-speech

  இந்த நிலையில் நாளை (5ம் தேதி) வீடுகளில் விளக்கேற்றும்படி பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். உலக அளவில் ஒவ்வொரு நாடும் எவ்வளவு பரிசோதனை செய்கின்றன என்ற இன்ஃபோ கிராம் படத்தை வெளியிட்டுள்ள ராகுல் காந்தி, தன்னுடைய பதிவில், “கொரோனா கோவிட்19 வைரஸை கண்டறிய இந்தியா போதுமான அளவு பரிசோதனையை மேற்கொள்ளவில்லை. மக்களை கைதட்டச் சொல்வதாலோ, வானத்தை நோக்கி டார்ச் லைட் அடிக்கச் சொல்வதாலோ பிரச்னை தீர்ந்துவிடாது” என்று கூறியுள்ளார். 

  ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இன்ஃபோகிராம் படத்தில், உலக அளவில் 10 லட்சம் பேருக்கு தென் கொரியா 7622 பேருக்கு பரிசோதனை செய்வதாகவும், இந்தியா 10 லட்சம் பேருக்கு வெறும் 29 பேருக்கு மட்டுமே சோதனை செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே பாகிஸ்தானில் 67 ஆகாவும் இலங்கையில் 97 ஆகவும் பரிசோதனை அளவு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.