டார்ச்சர் செய்ததால் எலி மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை…திருநங்கையிடம் தீவிர விசாரணை!

  12
   சோனாலி

  சோனாலிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சித்தி விஜயகுமாரிக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

  திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த நன்னிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி-விஜயகுமாரி தம்பதி.இவர்களின் வீட்டின் அருகே விஜயகுமாரியின் உறவினரான திருநங்கை சோனாலி வசித்து வந்துள்ளார். சோனாலிக்கு விஜயகுமாரி சித்தி முறை. திருநங்கை சோனாலிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சித்தி விஜயகுமாரிக்கும் அவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

  sonali

  மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருநங்கை சோனாலி, விஜயகுமாரியை பணம் கேட்டு துன்புறுத்தி வந்ததாகக்  கூறப்படுகிறது. இதனால் விஜயகுமாரி கடந்த 26 ஆம் தேதி வீட்டிலிருந்த எலி மருந்தை சாப்பிட்டுள்ளார். பின்பு நேராக லால்குடி காவல்நிலையத்திற்குச் சென்று நான் இறந்தால் அதற்கு காரணம்  சோனாலி தான் என்று கூறிவிட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். பின்பு அங்கிருந்து மேல்சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 

  vijayakumari

  இந்நிலையில் விஜயகுமாரி 7 நாட்களுக்குப் பிறகு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கை சோனாலியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.