ஜே.என்.யூ-வில் தாக்குதல் நடத்திய ஏ.பி.வி.பி! – திருமா நேரடி குற்றச்சாட்டு

  0
  4
  thirumavalavan

  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.

  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.

  thiruma-at-protest

  டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நுழைந்த மர்ம கும்பல் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியது. இதில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

  இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாரதிய ஜனதா கட்சியின் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்புதான் காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த தாக்குதலைக் கண்டித்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனும் பங்கேற்றார்.
  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி குண்டர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ள மாணவர்களுடன் போராட்டத்தில்” என்று குறிப்பிட்டுள்ளார். ஏ.பி.வி.பி என்று அனைவரும் சந்தேகம் தெரிவித்துவரும் நேரத்தில், அவர்கள்தான் தாக்குதல் நடத்தினார்கள் என்று திருமாவளவன் துணிவுடன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.