ஜெயிச்ச பிறகு தொகுதி பக்கம் போக மாட்டீங்க சரி.. நாடாளுமன்றத்துக்காவது போங்க சார்….

  0
  1
  சன்னி தியோல்

  பிரபல பாலிவுட் நடிகரும், குருதாஸ்புர் பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினருமான சன்னி தியோல் இதுவரை 9 நாட்கள் மட்டுமே நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

  கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆட்சி கட்டிலில் அமர்ந்தது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ. அரசு. மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 17ம் தேதி தொடங்கியது. சென்ற மாதம் 28ம் தேதி திட்டமிட்டப்படி கூட்டத்தொடர் முடிவடைய வேண்டும். ஆனால் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற வேண்டி கூட்டத்தொடர் காலம் நீடிக்கப்பட்டது.

  நாடாளுமன்றம்

  நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து எம்.பி.க்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என பா.ஜ. தனது கட்சி உறுப்பினர்களிடம் அறிவுறுத்தியது. இதெல்லாம் நம்ம பாலிவுட் நடிகரும், குருதாஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான சன்னி தியோலுக்கு காதில் விழுந்ததா இல்லையான்னு நமக்கு சரியா தெரியவில்லை. ஏன் அப்படி பேசறீங்கன்னு பாக்கிறீ்ங்களா? 

  மக்களவை

  இதுவரை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் மொத்தம் 37 நாட்கள் நடந்துள்ளது. இதில், வெறும் 9 நாட்கள் மட்டுமே சன்னி தியோல் அவை நடவடிக்கையில் கலந்து கொண்டார். முதல்ல நல்ல பிள்ளை மாதிரி தொடர்ந்து 5 நாட்கள் கலந்து கொண்டார். அப்புறம் போன போகுதுன்னு சில நாட்கள் நாடாளுமன்றத்தை எட்டி பார்த்துள்ளார். ஒட்டு மொத்தத்தில் அவர் 28 நாட்கள் அவைக்கு வராமல் எஸ்கேப் ஆகிவிட்டார். 

  பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பாடம் எடுத்த போதும், அந்த கட்சியை சேர்ந்த சன்னி தியோல் நாடாளுமன்றத்துக்கு வராமல் இருப்பது பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.