ஜெயலலிதா மரணம்… சந்தேகங்கள் களையப்படும்: ஸ்டாலின் உறுதி

  9
  mks

  ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு களையப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  தஞ்சாவூர்: ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு களையப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகங்கள் இருப்பதாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

  அப்போது மக்கள் மத்தியில் அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கப்படும். நாங்கள் இந்த வழக்கை முறையாக விசாரிப்போம். ஜெயலலிதாவின் மறைவுக்கு காரணமானவர்கள் சிறை செல்வார்கள். யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஜெயலலிதா மரணத்திற்கு யார் காரணம் என்று இதுவரை தெரியாமல் சர்ச்சையாக உள்ளது. இந்த சந்தேகங்கள் எல்லாம் திமுக ஆட்சிக்கு வந்த பின் களையப்படும் என்றார்.