ஜீரண சக்தியை அதிகரிக்கும் பலே சாப்பாடு! ருசியும் அபாரம்!

  0
  2
  அங்காயப் பொடி

  தீபாவளி பண்டிகைக்கு செய்கிற பலகாரங்களை அன்றே முழுவதையும் காலி செய்து விடும் நோக்கத்தில் தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து சாப்பிட்டவர்கள் எல்லாம், அடுத்த நாளோ, அதற்கடுத்த நாளோ அஜீரண கோளாறால் அவதிபடுவார்கள். பலகாரங்கள் எங்கேயும் போய் விடாது. அதனால் என்ன தான் அமிர்தமே ஆனாலும், அளவாய் சாப்பிட வேண்டும்.

  தீபாவளி பண்டிகைக்கு செய்கிற பலகாரங்களை அன்றே முழுவதையும் காலி செய்து விடும் நோக்கத்தில் தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து சாப்பிட்டவர்கள் எல்லாம், அடுத்த நாளோ, அதற்கடுத்த நாளோ அஜீரண கோளாறால் அவதிபடுவார்கள். பலகாரங்கள் எங்கேயும் போய் விடாது. அதனால் என்ன தான் அமிர்தமே ஆனாலும், அளவாய் சாப்பிட வேண்டும். கூடவே அப்படி அதிகமான இனிப்பு பலகாரங்கள் என்று எடுத்துக் கொள்ளும் போது ஒரு வேளையாவது இப்படி சாதத்தைச் சமைச்சு சாப்பிட்டுப் பாருங்கள். அஜீரண கோளாறுகளே ஏற்படாமல் ஜீரண சக்தியை நன்கு தூண்டும். இப்படி சமைச்சு சாப்பிட்டால் வயிற்று உப்புசம் குறையும். சாப்பிட்ட பின்பு புளித்த ஏப்பம் சரியாகும்.

  digestive

  பசியைத்தூண்டும். மலச்சிக்கல் சரியாகும்.
  தேவையான பொருட்கள்
  பச்சரிசி            -200கி
  நெய்                -2டேபிள்ஸ்பூன்
  பெருங்காயம்        -1சிட்டிகை
  மணத்தக்காளி வற்றல்-1டேபிள் ஸ்பூன்
  சுக்குப்பொடி        -1டேபிள் ஸ்பூன்
  கறிவேப்பிலை        -10இலைகள்
  உப்பு            -தேவையான அளவு
  கடுகு            -1/2டீஸ்பூன்
  உளுத்தம் பருப்பு    -1/2டீஸ்பூன்
  கடலைப்பருப்பு    -1/2டீஸ்பூன்
  செய்முறை

  agaiya podi

  அரிசியை நன்கு கழுவி, சுத்தம் செய்து வேக வைத்து உதிரி உதிரியாக வடித்துக் கொள்ள வேண்டும். கடாயில் சிறிது நெய் விட்டு மணத்தக்காளி வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயம், சுக்குப் பொடி  இவை அனைத்தையும் தனித்தனியாக வறுத்து உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ள வேண்டும். கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு  தாளித்து அரைத்த பொடியை சேர்த்து, ஆறிய சாதத்தையும் கலந்து கிளறிவிட வேண்டும். வாரம் ஒரு முறை இந்த அங்காயப் பொடி சாதத்தை செய்து சாப்பிட உடல் ஆரோக்கியமாகவும், கட்டுடலாகவும் நிச்சயம் மாறும் என்பதில் ஐயமில்லை.