ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி! 

  14
  ஜியோ

  ஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. 

  ஜியோவின் வருகைக்கு பிறகு பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்தன. ஜியோவின் சலுகைகளை சமாளிப்பதற்காக வோடபோனும், ஐடியாவும் இணைந்தது. இருப்பினும் ஜியோவுடன் போட்டிப்போட முடியவில்லை.

  ஜியோ

  இந்நிலையில் ஏர்டெல் நிறுவனமும், வோடபோனும் தங்களின் சேவைக் கட்டணத்தை டிசம்பர் 1 முதல் உயர்த்தவுள்ளதாக நேற்று அறிவித்தன. இந்நிலையில், இந்தியாவின் மிக பெரிய மொபைல் நெட்வொர்க் மற்றும் அதிக வாடிக்கையாளர்களை தன்வசம் வைத்திருக்கும் ஜியோவும் தனது கட்டணத்தை வரும் 1 ஆம் தேதி முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இத்தனை நாள் ஜியோவின் சலுகைகளை கொண்டாடி மகிழ்ந்த ஜியோ வாடிக்கையாளர்கள் இனி ஏன் ஜியோவை தேர்ந்தெடுத்தோம் என வருத்தப்படப்போகிறார்கள்.