ஜியோ அள்ளி இறைக்கும் அதிரடி சலுகைகள்! உற்சாகத்தில் பயனாளர்கள்! 

  11
  ஜியோ

  ஜியோ உபயோகித்து வந்த வாடிக்கையாளர்கள் அனைவருமே கடந்த வாரம் விழி பிதுங்கி நின்றார்கள். பிற செல்போன் எண்களுக்கு நிமிடத்திற்கு 6 பைசா என்று இதுவரை இலவசமாக வழங்கி வந்த ஜியோ கட்டணத்தை அறிமுகப்படுத்தியதும், அவசரப்பட்டு ஜியோ சேவைக்கு மாறிவிட்டோமோ என்று கூட பலரும் நினைத்து வந்தார்கள்.

  ஜியோ உபயோகித்து வந்த வாடிக்கையாளர்கள் அனைவருமே கடந்த வாரம் விழி பிதுங்கி நின்றார்கள். பிற செல்போன் எண்களுக்கு நிமிடத்திற்கு 6 பைசா என்று இதுவரை இலவசமாக வழங்கி வந்த ஜியோ கட்டணத்தை அறிமுகப்படுத்தியதும், அவசரப்பட்டு ஜியோ சேவைக்கு மாறிவிட்டோமோ என்று கூட பலரும் நினைத்து வந்தார்கள். இந்நிலையில், சுமார் 1500 ரூபாய் மதிப்புள்ள ஜியோ போனை வாடிக்கையாளர்களுக்கு சலுகையாக வெறும் 699 ரூபாய்க்கு ஜியோ வழங்குகிறது. இந்த சேவையைப் பயன்படுத்தும் போது குறைந்த பட்சமாக 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 700 ரூபாய் மதிப்பிலான டேட்டா இலவசமாக கிடைக்கும்.

  jio

  இது தவிர, முதல் ஏழு ரீசார்ஜ்களுக்கு ஜியோ 99 ரூபாய் மதிப்புள்ள இலவச டேட்டா சேவைகளை வழங்கும். 10 ரூபாய்க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் பிற போன்களுக்கு 124 நிமிடம் வாய்ஸ்கால்கள் கிடைக்கும். இதுதவிர 1 ஜிபி டேட்டாவும் இலவசமாக வழங்கப்படும். 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 1632 நிமிட வாய்ஸ்கால்களும் 10 ஜிபி டேட்டாவும் இலவசமாக கிடைக்கும்.
  அதே சமயம் 222 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 56 ஜிபி டேட்டா மற்றும் பிற மொபைல்களுக்கு முதல் 1000 நிமிடங்கள் இலவசமாக பேச முடியும். இது தவிர  தினசரி 100 மெஸேஜ்களும் இலவசம். இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.  இந்த புதிய பிளான்களை பொறுத்தவரை இலவச வாய்ஸ் கால்களுக்கு பிறகு, நிமிடத்துக்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்றும், தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் இலவச எஸ்.எம்.எஸ்கள் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.