ஜியோவுக்கு போட்டியாக 2 புதிய சலுகை திட்டங்களை அறிமுகப்படுத்தியது பி.எஸ்.என்.எல்.

  0
  2
  பி.எஸ்.என்.எல்

  தொலைத் தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள இழப்பை ஓரளவேனும் சரிகட்டும் முயற்சியில் பி.எஸ்.என்.எல். இறங்கி உள்ளது. அதற்காக புதிய வாடிக்கையாளர்களை கவரவும், ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், 2 புதிய திட்டங்களை பி.எஸ்.என்.எல் அறிமுகப்படுத்தி உள்ளது. 

  அதுதான், ரூ .97 மற்றும் ரூ.365 பிரிபெய்ட் திட்டங்கள். இதன் மூலம் பயனாளிகள் தினமும 2 ஜிபி டேட்டடா பெறுவார்கள். 

  bsnl vs jio

  அதுதான், ரூ .97 மற்றும் ரூ.365 பிரிபெய்ட் திட்டங்கள். இதன் மூலம் பயனாளிகள் தினமும 2 ஜிபி டேட்டடா பெறுவார்கள். 
  தற்போது பி.எஸ்.என்.எல். அறிமுகம் செய்துள்ள ரூ.97 திட்டத்தின் மூலம் 18 நாட்களுக்கு தினமும் 250 அவுட்கோயிங் கால்கள் எந்த நெட்வொர்க்குகளுக்கும் செய்யலாம். மேலும் நாள்தோறும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

  2வது திட்டடமான 365 ரூபாயில் ரீசார்ஜ் செய்து, 365 நாட்களுக்கு தினம் 250 அவுட் கோயிங் கால்கள் எந்த நெட்வொர்க்குகளுக்கும் மேற்கொள்ளலாம்.   இத்திட்டத்தில் பயனர்களுக்கு முதல் 60 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஆனால் இந்த சலுகை தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  bsnl

  இது மட்டுமின்றி வேறு சில வட்டாரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக ரூ.997 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் இத்திட்டம், தினமும் 3 ஜிபி டேட்டா பயனாளிகளுக்கு கிடைக்கும். இந்த நன்மையை 180 நாட்களுக்கு மட்டுமே வாடிக்கையாளர்கள் பெற முடியும். மத்தபடி 250 நிமிடங்கள் அவுட் கோயிங் கால்கள் எந்த நெட்வொர்க்கிற்கும் செய்யலாம்.