ஜாலியாக நண்பர்களுடன் பைக்கில் ஊர் சுத்தும் கவின்! வெளியான வீடியோ 

  0
  1
  Kavin

  கவின் ஊர் சுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

  கவின் ஊர் சுத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை 12 போட்டியாளர்கள் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில்  தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள்  4 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.  அதில்  கவின் திடீரென்று எதிர்பாராத விதமாக பிக் பாஸ் கொடுத்த ஆஃபர் 5 லட்சத்துடன் வெளியேறினார்.  

  Kavin

  இதையடுத்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த கவின் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றிவருகிறார். இது கவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கவின் முதலில் தனது தாயின் நிலைமையை அறிந்து நேராக தனது தாயையும் அவரது உறவினர்களையும் பார்த்து குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டார்.

   

   

  அதன்பின் மோசடி வழக்கில் சிக்கிய தாயை ஜாமீனில் வெளியே எடுத்தார். இதையடுத்து அவரது தாய் மீது வழக்கு தொடர்த 29 பேருக்கும் அவர்களுடைய பணத்தை செட்டில் செய்வதாக தெரிவித்தார். குடும்பத்துக்கு பொறுப்பாக நடந்துகொண்ட கவின் இப்போது நண்பர்களுடன் ஊர் சுற்றிவருகிறார்.