ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு !

  0
  8
  MK Stalin - Hemant choran

  காங்கிரஸ் கூட்டணியில்  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-30 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும் வெற்றி பெற்றதால் ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார்.

  ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகச் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அமைத்திருந்தது.

  ttn

  தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும் காங்கிரஸ் கூட்டணி, 47 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க 25 இடங்களில் மட்டுமே பெற்றதால், ஜார்கண்டில் நடைபெற்று வந்த பா.ஜ.க ஆட்சி முடிவுக்கு வந்தது. 

  காங்கிரஸ் கூட்டணியில்  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா-30 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும் வெற்றி பெற்றதால் ஜார்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்க உள்ளார்.

  ttn

  வரும் 29 ஆம் தேதி நடைபெற உள்ள அந்த பதவியேற்பு விழாவிற்கு ஹேமந்த் பல கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். அதே போல, திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கும் ஹேமந்த் அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே, மகாராஷ்டிராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி அமைந்த போதும் அதில் வெற்றி பெற்ற உத்தவ் தாக்ரே, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.