ஜல்லிக்கட்டு பார்க்க மோடியை அழைத்து வர முயற்சி செய்வோம் : அமைச்சர் ஆர்.பி உதயகுமார்!

  0
  4
  Minister R.P Udayakumar

  முதலமைச்சரின் சரித்திர சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக மதுரையில் தொடர் ஜோதி நடைப்பயணம் நேற்று தொடங்கியது.

  முதலமைச்சரின் சரித்திர சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதமாக மதுரையில் தொடர் ஜோதி நடைப்பயணம் நேற்று தொடங்கியது. இதனை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

  ADMK

  அமைச்சர் ஆர்.பி உதய குமார் தலைமையில் நடைபெறும் இந்த நடைப்பயணம் முதற்கட்டமாக மதுரையில் உள்ள 10 இடங்களில் 5 நாட்களுக்கு நடக்கவுள்ளது. நடைப்பயணத்தின் பொது அந்தந்த பகுதிகளில் அரசின் நலத் திட்டங்களை மக்களுக்கு அமைச்சர் வழங்கவுள்ளார். 

  Minister udaya kumar

  நடைப்பயணத்தின் இரண்டாம் நாளான இன்று அமைச்சர் உதய குமார் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ளார். அதில், ‘ இந்த பயணத்தின் மூலமாக அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்களுக்குத் தெரியப் படுத்தி, திமுகவின் குற்றச்சாட்டைப் பொய் என்று நிரூபிப்பதே எங்கள் முதல் கடமை.

  Jallikattu

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைப் பார்க்கப் பிரதமர் மோடியை அழைத்துவர அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டுள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தான் வெற்றி பெரும்’ என்று கூறினார். மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் சிவாஜி நிலைமை தான் வரும் என்று முதல்வர் கூறியது சரியானது தான்.  முதல்வர் சொன்னால் அது சரியாகத் தான் இருக்கும். அதனை நான் வழிமொழிகிறேன் என்று கூறியுள்ளார்.