ஜயப்ப பக்தையை தாக்கிய பாஜக வேட்பாளருக்கு 14 நாட்கள் சிறை

  0
  2
  பிரகாஷ் பாபு - மோடி

  பிரகாஷ் பாபு, கேரள பாஜகவின் இளைஞரணி தலைவர் ஆவார். அவர் மீது இந்த வழக்கு மட்டுமல்லாது, கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  சபரிமலை விவகாரம், ஐயப்ப பக்தை ஒருவரை தாக்கிய கோழிக்கோடு பாஜக வேட்பாளரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறை வைக்க உத்தரவு.

  சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி  தீர்ப்பளித்தது. அதற்கு எதிராக பாஜக மற்றும் காவி அமைப்புகள் சில போராட்டத்தில் ஈடுபட்டன.

  kerala

  கேரள முதல்வர் பினராயி விஜயன், பெண்கள் சாமி தரிசனம் காண வழிவகை செய்தார். சபரிமலை ஐயப்ப தரிசனம் காண வரும் பெண்களுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சாமி தரிசனம் காண வரும் பெண்கள் காவி கும்பல்களால் தாக்கப்பட்டனர். இந்நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோடு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரகாஷ் பாபு, நடுத்தர வயதுடைய பெண் ஒருவரைத் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

  பிரகாஷ் பாபு

  bj

  இந்த வழக்கை விசாரித்த ரன்னி முதல் தர நீதிமன்றம், பிரகாஷ் பாபுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

  கேரளா

  பிரகாஷ் பாபு, கேரள பாஜகவின் இளைஞரணி தலைவர் ஆவார். அவர் மீது இந்த வழக்கு மட்டுமல்லாது, கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதற்காகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரை கொட்டரக்கரா சிறையில் வைத்துள்ளனர்.

  இதையும் வாசிங்க

  தேர்தல் ஆணையத்துக்கு டிடிவி தினகரன் நன்றி!