ஜம்மு-காஷ்மீரில் 2ஜி மொபைல் இன்டர்நெட், பிராட்பேண்ட் சேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கின

  0
  12
  jammu

  ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2ஜி மொபைல் இன்டர்நெட், பிராட்பேண்ட் சேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கின.

  காஷ்மீர்: ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2ஜி மொபைல் இன்டர்நெட், பிராட்பேண்ட் சேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கின.

  கடந்தாண்டு ஆகஸ்டு 5-ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்தது. இதனால் அந்த மாநில மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு, தகவல் தொடர்பு துண்டிப்பு, இணையதள வசதி நிறுத்தம் ஆகிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

  இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரின் 20 மாவட்டங்களில் 2ஜி மொபைல் இண்டர்நெட் சேவைகள், பிராட்பேண்ட் சேவைகள் மீண்டும் செயல்பட தொடங்கின. தற்போது வரை 17 டெலிபோன் எக்ஸ்சேன்ஜுகள் செயல்படத் தொடங்கியுள்ளன. நாளை முதல் அனைத்து டெலிபோன் சேவைகளும் செயல்பட ஆரம்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் தகவல்தொடர்பு பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.