ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்க நகைகளில் ஹால் மார்க்கிங் கட்டாயம்- மத்திய அரசு! 

  0
  2
  தங்க நகைகள்

  வரும் 2020 ஜனவரி 1 ஆம் தேதி முதல்  தங்க நகைகளுக்கான ஹால் மார்க்கிங் கட்டாயமாக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  கடைகளில் விற்கப்படும் தங்க நகைகளின் தரத்தை உறுதிப்படுத்த இந்திய தர நிர்ணயக் கழகத்தின் சார்பில் ஹால் மார்க் முத்திரை வழங்கப்படுகிறது. இந்த முத்திரையைக் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கத்தின் தரத்தை உறுதி செய்யலாம். அதாவது 14 காரட், 18 காரட் மற்றும் 22 காரட் ஆகிய மூன்று தரங்களாகப் பிரித்து ஹால்மார்க் முத்திரை வழங்கப்படும்.. இதில் பிஐஎஸ் முத்திரை, தர முத்திரை, சான்றளிப்பு மையத்தின் முத்திரை மற்றும் விற்பனையாளரின் அடையாளம் என நான்கு குறியீடுகள் இடம் பெற்றிருக்கும்.

  தங்க நகைகள்

  இந்நிலையில் ஹால் மார்க் முத்திரையைக் கட்டாயமாக்குவதற்கான விதிமுறைகளுக்கு மத்திய அரசு கடந்த 2000 ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. ஆனாலும் இது நடைமுறைக்கு வராமல் இருந்தது. இந்நிலையில், அனைத்து நகைகளும் ஹால்மார்க் முத்திரையுடன்தான் விற்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்.