ஜக்கி வாசுதேவை வச்சி செய்யும் தி.மு.க டாக்டர் எம்.பி!

  0
  1
  Jaggi Vasudev

  “நான் தண்ணீரை தவறாக பார்த்து கொடுத்தால் நோய் வரும்” என்று ஜக்கி வாசுதேவ் கூறியதை நிரூபிக்கத் தயாரா என்று தி.மு.க எம்.பி டாக்டர் செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார்.

  “நான் தண்ணீரை தவறாக பார்த்து கொடுத்தால் நோய் வரும்” என்று ஜக்கி வாசுதேவ் கூறியதை நிரூபிக்கத் தயாரா என்று தி.மு.க எம்.பி டாக்டர் செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார்.

  ttn

  குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகவும் அது தொடர்பாக நடந்து வரும் போராட்டங்களை விமர்சித்தும் பிரபல சாமியார் ஜக்கி வாசுதேவ் கருத்து தெரிவித்திருந்தது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜக்கி வாசுதேவின் வீடியோவை பிரதமர் மோடியும் ரீட்வீட் செய்திருந்தது பரபரப்பு அதிகரிக்கக் காரணமாக இருந்தது.

  ttn

  அந்த வீடியோவில், 18 விநாடிகள் மட்டும் ஓடக்கூடிய காட்சியை எடுத்து தருமபுரி தி.மு.க எம்.பி டாக்டர் செந்தில் குமார் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஜக்கி வாசதேவ், “நான் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து நல்லவிதமாக பார்த்து உங்களுக்குக் கொடுத்தால் உங்களுக்கு நல்லது வந்து சேரும். அதுவே நான் வேறுவிதமாகப் பார்த்து உங்களுக்குக் கொடுத்தால், இன்று இரவே நோயில் நீங்கள் படுத்துவிடுவீர்கள். இது மாந்திரிகம் இல்லை… அறிவியல்” என்று சொல்கிறார்.

  இதற்கு டாக்டர் செந்தில், “இதை நிரூபிக்க வேண்டும் என்று நான் சவால் விடுகிறேன். நேரலையில் நீங்கள் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து எந்த விதமாக வேண்டுமானாலும் பார்த்து என்னிடம் கொடுங்கள். நான் நோயில் படுக்கிறேனா என்று பார்க்கலாம். சத்துரு ஜக்கி வாசுதேவ் இதற்குத் தயாரா? சவால் ஏற்ற நிரூபித்துக் காட்டுங்கள். இதனால்தான் இவர் அயோக்கியர்” என்று குறிப்பிட்டுள்ளார்.