சோறு ஆரோக்கியத்தை தருகிறதா? நீரிழிவு நோயை தருகிறதா?

  70
  நீரிழிவு நோயை

  அந்தக் காலங்களில் நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்ததற்கு முக்கியக் காரணம் பழைய சோறுதான். ஆனால் அதை பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை. எதையும் சூடாகவே சாப்பிடவேண்டும் என கொதிக் கொதிக்க சாப்பிட்டு விட்டு அலுவலகம் ஓடுகின்றனர்

  அந்தக் காலங்களில் நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமாக இருந்ததற்கு முக்கியக் காரணம் பழைய சோறுதான். ஆனால் அதை பெரும்பாலான மக்கள் விரும்புவதில்லை. எதையும் சூடாகவே சாப்பிடவேண்டும் என கொதிக் கொதிக்க சாப்பிட்டு விட்டு அலுவலகம் ஓடுகின்றனர்.
  பழைய சோறு சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் இருக்கின்றனர். பழைய சோறு உடல் வெப்பத்தை குறைத்து சக்தியை அதிகரிக்கும். அதில் புரத சத்து, பொட்டாசியம் உள்ளிட்ட பல சத்துக்கள் உள்ளது. பழைய சோற்றில் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நிறைந்திருப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது.

  rice

  அதே சமயம் சோறு அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும் என்ற கருத்தில் உண்மை இல்லை. 
  அரிசியை பழைய நடைமுறையில் வேக வைக்காமல், குக்கரில் வேகவைத்து கஞ்சியை வடிக்காமல் சாப்பிடுவதுதான் நீரிழிவு நோய் வரக் காரணம். குக்கரில் சமைத்து சாப்பிட்டால் உடல் உபாதைகள் வரும். அதேபோல் சோறு மிகவும் சூடான நிலையில் சாப்பிடக்கூடாது. அதே சமயம் ஆறிப்போயும் சாப்பிடக்கூடாது.

  rice

  மிதமான சூட்டில் மட்டுமே உட்கொள்ளவேண்டும். சில்லென்று இருக்கும் நிலையில் சோறு சாப்பிட்டால், கீழ்வாதம், மூட்டு வாதம் ஏற்படுத்தும். பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோராக கடைந்து ஊற்றி சாப்பிடலாம். சோறு வடித்த கஞ்சியை ஆறிபோய் குடித்தால் வாயு பிரச்சனைகள் உண்டாக்கும்.

  buttermilk

  சோறு வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பை போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் விலகும். உலையில் கொதிக்கும்போதே கஞ்சியை எடுதது பருகினால் நீர் கடுப்பை நீக்கும்.
  மிதமான சூட்டிய்ல சோற்றில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த் தாகம் ஏற்படுவதும், பித்தம் உண்டாவதும் நீங்கும். பச்சரிசி பச்சரிசி சோற்றில் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாதம், பித்தம் நீங்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.