சோமேட்டோ, நியர் பை போன்ற செயலிகளை கழட்டிவிட்ட 1200 உணவகங்கள்!

  0
  5
  zomato

  இந்தியா முழுவதிலுமுள்ள 1,200 உணவங்கள் சோமேட்டோ, ஈஸி டின்னர் போன்ற சில அப்ளிகேஷன் சேவைகளின் திட்டங்களிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டது.

  இந்தியா முழுவதிலுமுள்ள 1,200 உணவங்கள் சோமேட்டோ, ஈஸி டின்னர் போன்ற சில உணவு டெலிவரி செய்யும் அப்ளிகேஷன் சேவைகளின் திட்டங்களிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டது. 

  சோமேட்டோ

  உணவு டெலிவரி நிறுவனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திடீரென 1200 பிரபலமான ரெஸ்ட்டாரன்ட்கள் சோமேட்டோ, ஈஸி டின்னர், நியர் பை, மேஜிக் பின் மற்றும் கர்மெட் பாஸ்போர்ட் ஆகிய நிறுவனங்களுடன் இருந்த உறவை முறித்துக்கொண்டன. 

  மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, கோவா, புனே ஆகிய இடங்களில் உள்ள உணவகங்கள், உணவுகளை டெலிவரி செய்யும் அப்ளிகேஷன் சேவைகளிலிருந்து, விலகி உள்ளன. இதற்காக #Logout என்கிற பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டு, அதில் பல உணவகங்கள் இணைந்துள்ளன.