சோப்பு, பவுடர் வித்து ரூ.1,848 கோடி லாபம் பார்த்த இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம்

  0
  3
  இந்துஸ்தான் யூனிலீவர் தயாரிப்புகள்

  நுகா்பொருள் விற்பனையில் கலக்கி வரும் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,848 கோடி ஈட்டியுள்ளது.

  பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. தற்போது ஹோம் கேர், அழகு என பல்வேறு நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தனது நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,848 கோடி ஈட்டியுள்ளது.

  இந்துஸ்தான் யூனிலீவர்

  இது சென்ற நிதியாண்டின் இதே காலாண்டை காட்டிலும் 21 சதவீதத்துக்கும் அதிகமாகும்.2018 செப்டம்பர் காலாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,525 கோடிதான் சம்பாதித்து இருந்தது. மேலும், இந்த நிதியாண்டில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் தனிப்பட்ட வருவாய் ரூ.9,708 கோடியாக உயர்ந்துள்ளது.

  இந்துஸ்தான் யூனிலீவர் தயாரிப்புகள்

  இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு தனது பங்குதாரர்களுக்கு  இந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு  இடைக்கால டிவிடெண்டாக ரூ.11 வழங்குவதாக அறிவித்துள்ளது. நேற்று மும்பை பங்குச் சந்தையில் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்கு விலை 0.50 சதவீதம் அதிகரித்து ரூ.2,014.70ஆக உயர்ந்தது.