சொன்ன வாக்கை காப்பாற்றிய தேவ் படக்குழு! 

  0
  5
  தேவ்

  கார்த்தி நடிப்பில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியான திரைப்படம் தேவ். இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி ஜோடியாக இரண்டாவது முறையாக நடிகை ராகுரல் பரீத் சிங் நடித்திருந்தார்

  கார்த்தி நடிப்பில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி வெளியான திரைப்படம் தேவ். இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி ஜோடியாக இரண்டாவது முறையாக நடிகை ராகுரல் பரீத் சிங் நடித்திருந்தார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ரம்யாகிருஷ்ணன், அம்ரிதா, RJ விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

  இப்படத்தில் கார்த்தி பி.எம்.டபுள்யூ பைக்கை ஓட்டிக்கொண்டு வருவார். அந்த பைக்கை வெல்வதற்காக சில கேள்விகள் அடங்கிய போட்டியை அப்பட குழுவினர்  நடத்தினர். மேலும் அதில் வெல்வோருக்கு 8 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபுள்யூ பைக்கை பரிசளிப்பதாகத் தெரிவித்தனர். 

  dev

  பொதுவாக இதுபோன்ற போட்டி அறிவிப்புகளை  படத்தின் புரொமோஷனுக்காக படக்குழுவினர் நடத்துவது வழக்கம்.  ஆனால்  எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடவில்லை என்றால் அவர்களின் வாக்குறுதிகள் காற்றில் காணாமல் போய்விடும். ஆனால்  தேவ்  படக்குழுவினரோ கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளார்கள். 

  dev

  ஆம்.. அவர்கள் சொன்ன மாதிரி இருசக்கர வாகனப் போட்டியில் வென்ற நவீன்குமாருக்கும், அபர்ணாவுக்கும்  தலா 8 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபுள்யூ பைக்கை படக்குழு அளித்துள்ளது. நடிகர் கார்த்தியிடமிருந்து பரிசை பெற்று கொண்ட வெற்றியாளர்கள் இது எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியான தருணம் என்று கூறியுள்ளனர்.

  இதையும் படிங்க: டபாங் 3 துவங்கியது; படப்பிடிப்பு தளத்தில் பிரபுதேவா – சல்மான் – வைரலாகும் போட்டோ