சொந்த தம்பியையும் அவரது மனைவியையும் கொன்று புதைத்த அக்கா… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..!

  0
  2
  Selvaraj and Vasanthamani

  கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ்- வசந்தா மணி  தம்பதியினர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

  கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ்- வசந்தா மணி  தம்பதியினர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்களின் மகனுக்குத் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. மகனின் திருமணத்திற்காக அனைத்து உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் வைக்கும் பணியில் செல்வராஜும் வசந்தா மணியும் ஈடுபட்டுள்ளனர். திருமணம் நெருங்குவதால் வெள்ளக்கோயில் அருகே வசிக்கும் செல்வராஜின்  அக்கா கண்ணம்மா வீட்டிற்கு அழைப்பிதழ் வழங்க காரில் சென்றுள்ளனர். 

  Selvaraj

  அக்கா வீட்டிற்கு அழைப்பிதழ் வைக்கப் போவதாக வீட்டிலுள்ள தன் மகனிடம் சொல்லிவிட்டுச் சென்ற செல்வராஜ்- வசந்தா மணி நெடுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவர்களது மகன் பதற்றமடைந்து காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளார். அதனை விசாரித்து வந்த காவல்துறையினருக்கு திடீரென கரூர் மதுரை செல்லும் வழியே ஒரு கார் நிற்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. அதன் படி அங்குச் சென்ற காவல்துறையினர் அந்த கார் செல்வராஜ்- வசந்தா மணி சென்ற கார் என்பதை உறுதி செய்துள்ளனர். காரில் சென்ற தம்பதியினர் காரை அங்கே நிறுத்தி விட்டு எங்குச் சென்றிருப்பார்கள் எனக் குழம்பிய காவல்துறையினர் அவர்களது மகனுக்குத் தகவல் அளித்துள்ளனர். 

  Vasantha mani

  தகவல் அறிந்த மகன், அம்மா அப்பா இருவரும் அப்பாவின் அக்கா வீட்டிற்குத் தான் சென்றிருப்பார்கள் என்று கூறியதும் அங்கே சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது நடத்திய சோதனையில், செல்வராஜ் மற்றும் வசந்தா மணி இருவரின் உடலும் கண்ணம்மாவின் வீட்டுப் பின்புறம் புதைக்கப் பட்டுள்ளது என்ற  அதிர்ச்சி தரும் தகவல் தெரிய வந்துள்ளது. கண்ணம்மா தான் அவர்களைக் கொன்றாரா.. அவரது கார் வேறு இடத்தில் நின்றது ஏன்.. கொல்லப்பட்ட இருவரின் உடலையும் இங்கேயே புதைத்தது ஏன்.. இரு தரப்பினரிடையேயும் ஏதேனும் பிரச்னை நடந்துள்ளதா..என்ற பல கேள்விகள் காவல்துறையினரிடம் எழுந்தவண்ணம் உள்ளது. இதனால், கண்ணம்மாவையும் அவரது மருமகன் நாகேந்திரனையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.