சொந்த கட்சிக்காரரிடம் இருந்தே பணத்தை ஆட்டையை போட்ட அ.தி.மு.க உறுப்பினர்!

  0
  2
  AIADMK members

  தான் பக்கத்தில் இருந்த தியாகராய நகர்  114 ஆவது வட்டச் செயலாளர் சின்னையா என்பவர் பையில் இருந்து ரூ.16 ஆயிரத்தை திருடியுள்ளார்.

  கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி பெரியார் பிறந்த நாளன்று முதல்வர் எடப்பாடி பழனி சாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க கட்சியினரும், அண்ணா மேம்பாலம் கீழுள்ள பெரியார் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினர். 

  ADMK

  அப்போது அங்கு கூட்டம் மிகுந்து காணப்பட்டதால், அந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளார் அ.தி.மு.க தொண்டர் ஒருவர்.  அவர், தான் பக்கத்தில் இருந்த தியாகராய நகர்  114 ஆவது வட்டச் செயலாளர் சின்னையா என்பவர் பையில் இருந்து ரூ.16 ஆயிரத்தை திருடியுள்ளார்.

  அதிர்ஷ்ட வசமாக மிகுந்த கூட்டத்திலும் சின்னையா பணத்தை திருடியவரை கண்டு பிடித்துவிட்டார். திருடியவரை அடித்து உதைத்து தேனாம்பேட்டையில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார். விசாரணையில் திருடிய நபர் கோவையைச் சேர்ந்த அ.தி.மு.க தொண்டர் என்று கண்டுபிடிக்கப் பட்டது. இதனையடுத்து அவர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.