சொகுசு ஹோட்டலில் வீட்டு காவல் வைக்கப்பட்ட ரொனால்டினோ

  0
  89
  Ronaldinho

  பிரபல முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டினோ சொகுசு ஹோட்டலில் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.

  பராகுவே: பிரபல முன்னாள் கால்பந்து வீரர் ரொனால்டினோ சொகுசு ஹோட்டலில் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.

  ரொனால்டினோவின் ஓய்வு பெற்றதிலிருந்து அவரது வாழ்க்கை ஏற்ற தாழ்வுகளைக் கொண்டிருந்தது. போலி பாஸ்போர்ட்டுடன் நாட்டிற்குள் நுழைய முயன்றதால் பராகுவேயில் ரொனால்டினோ கைது செய்யப்பட்டார். அவர் மற்றும் அவரது சகோதரர் இருவரும் போலி ஆவணங்களை வைத்திருந்தனர். பின்னர் அக்ரூபாசியன் எஸ்பெஷலிசாடாவில் உள்ள சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

  ttn

  இந்த ஜோடி இப்போது முறையே 1.6 மில்லியன் டாலர் மற்றும் 8 லட்சம் டாலர் கொடுத்து சிறையில் இருந்து ஜாமீனில் வெளியேறியுள்ளனர். ரொனால்டினோ வீட்டுக் காவலில் இருப்பதால் அவரது துன்பங்கள் இன்னும் கண்டிப்பாக முடிவடையவில்லை. அவர் இந்த ஜாமீன் காலத்தை அசுன்சியனில் உள்ள பால்மரோகா ஹோட்டலின் ஆடம்பரமான அறையில் செலவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.