சொகுசு காரில் 5 அடி நீள நாகப் பாம்பு: போராடி மீட்ட ஊழியர்களின் வைரல் வீடியோ!

  0
  1
  Dunzo delivery

  சொகுசு காரில் 5 அடி நீள நாக பாம்பு பதுங்கிருந்த நிலையில், ஊழியர்கள் அதை பத்திரமாக மீட்கும் காட்சி வைரலாகி வருகிறது.

  கோவை: சொகுசு காரில் 5 அடி நீள நாக பாம்பு பதுங்கிருந்த நிலையில், ஊழியர்கள் அதை பத்திரமாக மீட்கும் காட்சி வைரலாகி வருகிறது.

  திருப்பூரைச் சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் விக்னேஷ் ராஜா, தன் உறவினரின் திருமணத்தில் பங்கேற்பதற்காக தனது பி.எம்.டபுள்யூ சொகுசு காரில் சென்றுள்ளார்.

  முத்தூர் அருகே வரட்டுக்கரை என்ற இடத்தில் சென்றபோது, நாகப் பாம்பு ஒன்று காரின் முன்பக்க கண்ணாடியில் படம் எடுத்து ஆடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் ராஜா, உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

  ஆனால், அவர்கள் வந்து பார்த்த போது பாம்பை காணவில்லை. இருப்பினும் சந்தேகம் அடைந்த விக்னேஷ், கோவையில் உள்ள சொகுசு காரின் நிறுவனத்தை தொடர்பு கொண்டு நடந்தவற்றை விளக்கியுள்ளார்.

  அதன்பின், அந்நிறுவனத்தின் பணிமனையில் காரை சோதித்து பார்த்த போது, காரின் என்ஜின் பகுதியில் 5 அடி நீள நாகப் பாம்பு சுருண்டு பதுங்கி இருந்தது தெரிய வந்தது.

  இதையடுத்து பாம்பு பிடிக்கும் வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் வந்து 1 மணி நேரம் போராடி பாம்பை பத்திரமாக மீட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.