சொகுசு காரில் நிர்வாணமாக காதல் ஜோடி சடலம் ! கொலையா? தற்கொலையா?

  0
  1
  salem lovers murder

  சொகுசு கார் ஒன்றில் நிர்வாண கோலத்தில் காதல் ஜோடியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  சொகுசு கார் ஒன்றில் நிர்வாண கோலத்தில் காதல் ஜோடியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  crim

  சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த வெள்ளி வியாபாரி கோபி என்பவரின் மகன் சுரேஷ். தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த சுரேஷ் கல்லூரி முடிந்து வீடு திரும்பாததால் அவருடைய குடும்பத்தார் சுரேஷை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கோபிக்கு சொந்தமான கார் பணிமனையில் சொகுசு காரில் சுரேஷ் மற்றும் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மேற்கண்ட விசாரணையில் இறந்து கிடந்தது வெள்ளி வியாபாரியான ரவி என்பவருடைய மகள் ஜோதிகா என்பதும், சுரேஷும், ஜோதிகாவும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இருவரின் சடலமும் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொண்டார்களா என போலீஸ் விசாரித்து வருகின்றனர். அல்லது இருவரும் காரில் தனிமையில் இருந்தபோது ஏசியில் ஏற்பட்ட கியாஸ் காரணமாக மூச்சடைத்து உயிரிழந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இருவரும் உயிரிழந்தது தற்கொலையா அல்லது கொலையா என போலிசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.