சைலன்ட்டாக காதலரை கரம்பிடித்த சிம்புவின் க்யூட் பொண்டாட்டி: வைரல் போட்டோஸ்!

  0
  17
  நடிகை

  படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு எம்.பி.ஏ படிப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார்.

  தமிழில் தனுஷ் நடித்த ‘மயக்கமென்ன’, சிம்பு நடித்த ‘ஒஸ்தி’ உள்பட சில படங்களில் நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய்.  தமிழில் 2 படங்களில் மட்டுமே நடித்துள்ள ரிச்சா தெலுங்கில் 6 படங்களிலும், பெங்காலி  மொழியில் 1 படத்திலும் நடித்துள்ளார். இதையடுத்து படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு எம்.பி.ஏ படிப்பதற்காக அமெரிக்கா சென்றுவிட்டார்.

  ttn

  இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக  ரிச்சா  சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டார்.அதில், ‘ஜோ என்பவரை பிசினஸ் ஸ்கூலில் சந்தித்தேன். அவருடன் பழகிய இந்த இரண்டு வருடங்கள் அற்புதமானவை. எங்கள் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்துள்ளோம். திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை’ என்று கூறியிருந்தார்.

   

  ttn

  இந்நிலையில்   ரிச்சா, ஜோ லாங்கெல்லா திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ மத முறைப்படி  நடைபெற்றுள்ளது. இதில் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.