சைக்கோவாக மாறிய உதயநிதி ஸ்டாலின்! இடைத்தேர்தல் தோல்வி எதிரொலி!

  0
  7
  உதயநிதி ஸ்டாலின்

  ஸ்டாலின் காதுபடவே, ‘சின்னப் புள்ள வெள்ளாம வீடு வந்து சேராது… முதல்ல ஆட்சியைப் புடிச்சு முதல்வராகிற வழியப் பார்ப்போம் தலைவரே

  திமுகவில் இளைஞரணிக்கு பொறுப்பேற்ற பிறகு உதயநிதி ஸ்டாலினிடம் நிறைய மாறுதல்கள். கட்சிக்குள்ளும் உதயநிதியின் கை ஓங்கி மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டார்கள் என்கிற பேச்சு திமுக தொண்டர்களிடையே பரவலாகப் பேசப்பட்டது. அன்பில் மகேஷ், உதயநிதி டீம் எடுக்கும் முடிவுகள் தான் கட்சிக்குள் செயல்படுத்தப்பட்டு வந்தது. இடைத்தேர்தலில் வியூகங்கள் வகுத்து இவர்களது டீம் தான் களமிறங்கினார்கள். இடைத்தேர்தலில் எப்போதும் ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்கிற நிலை இருந்து வந்தாலும், எடப்பாடி, மோடி மீதான அதிருப்தியின் காரணமாக எளிதாக வெல்லும் வாய்ப்பை இவர்கள் வீணடித்திருக்கிறார்கள் என்றே திமுக தொண்டர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

  udhay

  தேர்தலுக்கு முன்பாக, சட்டசபைத் தேர்தலுக்கான ஆரம்பம் தான் இந்த இடைத்தேர்தல் என்று ஒவ்வொரு மேடையிலும் முழங்கினார் உதயநிதி. அப்படியிருக்கும் போது இந்த தோல்வியை உதயநிதியால் தாங்கிக் கொள்ள முடியவில்லையாம். ஸ்டாலின் காதுபடவே, ‘சின்னப் புள்ள வெள்ளாம வீடு வந்து சேராது… முதல்ல ஆட்சியைப் புடிச்சு முதல்வராகிற வழியப் பார்ப்போம் தலைவரே.. அப்புறமா உதயநிதியைக் கொண்டு வரலாம்’ என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். 

  psycho

  அரசியலுக்கு மினி ஓய்வு கொடுத்து ‘சைக்கோ’வாக மாறத் துவங்கியுள்ளார் உதயநிதி ஸ்டாலின். இப்போதைக்கு அரசியலில் கருத்து சொல்ற வேலையை எல்லாம் மூட்டைக்கட்டி வைத்து விட்டு மிஷ்கின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘சைக்கோ’ படத்தின் டீசரை ரிலீஸ் செய்து தோல்விகளுக்கான பரிகாரத்தைத் தேடியிருக்கிறார்.  நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி என்று டபுள் ஹீரோயினுடன் களமிறங்கும் உதயநிதி, சைக்கோ மூலமாக ஹிட் கொடுத்து மிஷ்கினுக்கும் வாழ்வு கொடுப்பாரா? இல்லை பரத், பிஸியாக இருந்த இயக்குநர் பேரரசுவை வீட்டில் உட்கார வைத்தது போல மிஷ்கினுக்கும் ஓய்வு கொடுப்பாரா என்பது படத்தின் ரிசல்ட்டைப் பொருத்து அமையும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் கோலிவுட்டில்!