சேலமா… திருச்சியா? முதல்வரின் தடுமாற்றம்!

  0
  4
  tn cabinet meeting

  தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்த போது திருச்சியை தமிழகத்தின் தலைநகராக மாற்ற முயற்சி மேற்கொண்டார். தமிழ்நாட்டின் மையப் பகுதியில் உள்ளது. எல்லா மாவட்டங்களிலிருந்தும் எளிதில் திருச்சிக்கு வர முடியும் என்பதால் திருச்சியைத் தலைநகராக அறிவிக்க முயற்சித்தார். ஆனால், அது வெற்றி பெறவில்லை. 

  ஆந்திராவைப் பின்பற்றி தமிழகத்துக்கும் இரண்டாவது தலைநகரைத் தேர்வு செய்யும் முனைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
  தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக காவிரி டெல்டா வேளாண் பாதுகாப்பு மண்டலத்துக்கு அரசாணை வெளியிடுவது தொடர்பான முடிவு, தமிழகத்துக்கு இரண்டாவது தலைநகரை உருவாக்கும் முடிவு என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
  தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்த போது திருச்சியை தமிழகத்தின் தலைநகராக மாற்ற முயற்சி மேற்கொண்டார். தமிழ்நாட்டின் மையப் பகுதியில் உள்ளது. எல்லா மாவட்டங்களிலிருந்தும் எளிதில் திருச்சிக்கு வர முடியும் என்பதால் திருச்சியைத் தலைநகராக அறிவிக்க முயற்சித்தார். ஆனால், அது வெற்றி பெறவில்லை. 

  trichy

  தற்போதைய செங்கல்பட்டு மாவட்டத்தில் பழைய மாமல்லபுரம் சாலை பகுதியில் தலைநகரை நிர்மாணிக்க ஜெயலலிதா திட்டமிட்டார். விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக அந்த திட்டமும் கைவிடப்பட்டது. கடைசியில் ராணி மேரி கல்லூரி உள்ள இடத்தில் தலைமைச் செயலகம் அமைக்கத் திட்டமிட்டார். அதுவும் மாணவிகள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. தி.மு.க ஆட்சியில் துணைக்கோள் நகரம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், ராமதாஸ் உள்ளிட்டவர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக அதுவும் நின்றுபோனது. கடைசியில் ஓமந்தூரார் எஸ்டேட்டில் தலைமைச் செயலகத்தைக் கட்டி தொடங்கிவைத்தார். பின்னர் வந்த ஜெயலலிதா அதை மருத்துவமனையாக மாற்றினார்.
  இந்த நிலையில் தன்னுடைய பெயர் நிலைக்கும் வகையில் ஏதாவது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டுள்ளது. அவர் தமிழகத்தின் தலைமைச் செயலகத்தை சேலம் மாவட்டம் எடப்பாடி அல்லது திருச்சிக்கு கொண்டு செல்ல விரும்புகிறார்.

  eps-

  இதற்கான அறிவிப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் வௌியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டப்பேரவை சென்னையில் இருக்கட்டும், தலைமைச் செயலகத்தை மட்டும் வேறு நகரத்துக்கு மாற்றலாமா என்று பலரிடம் ஆலோசனை பெற்று வருகிறாராம். பலரும் இது ஒத்துவராது… ஏற்கனவே தமிழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த நிலையில் இந்த அறிவிப்பால் மிகப்பெரிய பாதிப்பு வரலாம் என்று எச்சரித்துள்ளார்களாம். ஆனாலும் தன்னுடைய முடிவில் முதல்வர் உறுதியாக உள்ளதாகவும் இதற்காகவே அமைச்சரவைக் கூட்டம் என்றும் தலைமைச் செயலகத்தில் பேசப்படுகிறது.